ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை எட்டுவது விரைவாகச் செய்ய முடியாதபடி சிக்கலானது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போரில் உக்ரைன் பொதுமக்களின் உயிரிழப்பானது சமீபத்திய வாரங்களில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாகப் பேசிய ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்கா விரைவாகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு விரும்புகிறது என்பதை உணர்கிறோம் எனத் தெரிவித்தார்.
ஆனால், உக்ரைன் நெருக்கடிக்கான தீர்வு விரைவாகச் செய்ய முடியாத அளவுக்குச் சிக்கலானது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.