ஓசூரில் மேம்பாலப் பணிகள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள கோபச்சந்திரம் பகுதியில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலப் பணிகள் நடந்து வருகிறது.
இதனால் மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், விடுமுறை தினத்தையொட்டி பெங்களூரில் இருந்து ஓசூருக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.