நாமக்கல்லில் அரசு உத்தரவை மீறி மே தின விடுமுறையிலும் சட்டவிரோத மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்றது.
மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு சார்பில் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாபட்டி, கரும்புக்காடு, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், எவ்வித அச்சமுமின்றி சட்டவிரோத மதுபான விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
இந்த இடங்களில் மதுபானங்கள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விலையேற்றி விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்ட விரோத மதுபான விற்பனை நடைபெறுவதை அறிந்தும் அப்பகுதியிலுள்ள காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.