சார் தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து, புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது.
இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 30-ஆம் தேதி ‘சார் தாம்’ யாத்திரை தொடங்கியது.
தொடர்ந்து கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களின் நடைகள் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், புகழ் பெற்ற கேதர்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பக்தர்களுடன் சென்று கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். வரும் 4-ஆம் தேதி பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.