ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி நாளில் சமூகத்தில் சமதர்மத்தை நிலைநாட்ட பாடுபடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சாதி வேறுபாடுகளை கடந்து பக்தி மார்க்கத்தின் மூலம் அனைவரும் இறைவனை அடையலாம் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியவர் ஸ்ரீ ராமானுஜர் என தெரிவித்துள்ளார்.
அவரது ஜெயந்தி நாளான இன்று சமூகத்தில் சமதர்மத்தை நிலைநாட்ட பாடுபடுவோம் என உறுதி ஏற்போம் என்றும் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.