திருப்பத்தூரில் தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
மிட்டூர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர், மாடப்பள்ளியில் உள்ள கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது நிலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்காளி செடிகளை நடவு செய்திருந்த நிலையில், தக்காளியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
இதனால் வேதனையடைந்த அவர், கடும் வெயில் காரணமாக தக்காளி வீணாகி வருவதாக கவலை தெரிவித்தார்.