கர்நாடகா, தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேரைச் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க அண்மையில் மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்தது.
இதனை ஏற்றுக்கொண்டு இருவரையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதிகள் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
புதிய நீதிபதிகள் பதவியேற்றவுடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.