பெங்களூருவில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று ரிச்மண்ட் டவுன், சாந்திநகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் பொதுமக்கள் பேருந்து நிறுத்தங்களில் தஞ்சம் அடைந்தனர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனிடையே பலத்த காற்று காரணமாக ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்ததில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.