இஸ்ரேலில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாடு சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது.
அங்கு நிலவும் வறண்ட வானிலை மற்றும் பயங்கர காற்றினால் இந்த காட்டுத்தீ விரைவில் ஜெருசலேம் நகரை அடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டின் பிரதமர் நேதன்யாகு, இந்த காட்டுத் தீயானது தேசிய அளவிலான அவசர நிலை எனவும், ஜெருசலேமை பாதுகாப்பதற்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.