நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 2.37 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வருவாய் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 12.6 சதவீதம் அதிகமாகும். கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்தியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாத வருவாயே அதிகபட்சம் ஆகும்.