மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சியில் சுவாமியும், அம்பாளும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 29ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
நாள்தோறும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், சித்திரைத் திருவிழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சியில், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை ஒரு பல்லக்கிலும், மீனாட்சி அம்மன் மற்றொரு தங்கப் பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
கோயில் யானை முன்னே செல்ல கிழக்கு சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூல வீதி வழியாக வில்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள பாகற்காய் மண்டகப்படிக்குப் பல்லக்குகள் சென்றடைந்தன. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.