உலகின் முதல் கியருடன் கூடிய மின்சார மோட்டார் சைக்கிளான Aera பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மேலும் எட்டு முக்கிய இந்திய நகரங்களில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
அதன்படி அடுத்து வரும் 45 நாட்களில் புனே, டெல்லி, சென்னை, கோயம்புத்தூர், மும்பை, ஜெய்ப்பூர், சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகிய 8 நகரங்களில் Aera வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சாலைகளின் தன்மைகளுக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Aera, சாலைத்தன்மை மற்றும் வேகத்திற்கு ஏற்ப கியர்களை மாற்றி ஓட்டும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.