தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுப்பகுதிகளில் மதிய நேரத்தில் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது.
காரிமங்கலம், அனுமந்தபுரம், மாரண்டஹள்ளி, பெல்ரம்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாகப் பெய்த மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது.
பேரூராட்சி பேருந்து நிலைய பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை முறையாகத் தூர்வாராத காரணத்தால், அதிகளவு மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.