ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மொபைலான 13T தற்போது அதிகாரப்பூர்வமாகச் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய ஃபிளாக்ஷிப் மாடல் சாம்சங்கின் Galaxy S25, கூகுளின் Pixel 9 அல்லது ஆப்பிளின் iPhone 16 உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் அடாப்ட்டிவ் 120Hz ரெஃப்ரஷ், 2,400nits பீக் பிரைட்னஸ் மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் கொண்ட 6.32-இன்ச் AMOLED LTPO டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இணைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் OnePlus 13T விற்பனை வரும் ஏப்ரல் 30 முதல் தொடங்க உள்ள நிலையில், 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இதன் பேஸ் வேரியன்ட் விலை 39,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.