தஞ்சை பெரிய கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்துள்ளது.
தமிழர்களின் கட்டட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் உலகப்புகழ் பெற்ற பெருவுடையார் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டன்று இரு பெண்கள் நடனமாடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், கோயிலில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும், இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது கண்டனத்திற்கு உரியது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், திருச்செந்தூர் கோயிலைப்போலத் தஞ்சை பெரிய கோயிலுக்குள்ளும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.