மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முன்னேறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உக்ரைன் நாட்டின் வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவுடன் சபலென்கா மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-க்கு 3 மற்றும் 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் அவர் அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதவுள்ளார்.