பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம், ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஹெல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் ராஜாங்க ரீதியிலான தடைகளை விதித்துள்ளன.
குறிப்பாக இரு நாடுகளும் தங்கள் வான் பரப்பைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால், விமான நிறுவனங்கள் அதிக எரிபொருள் செலவுகளை எதிர்கொள்கின்றன.
இந்நிலையில், இந்த தடை நீடிக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உரிய மானியம் வழங்கக்கோரி டாடா குழுமம் மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சகத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.