ஹரியானாவில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்ட கோதுமை பயிர்கள் நீரில் மூழ்கின.
கோதுமை மூட்டைகள் மீது போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாய்கள் காற்றின் வேகத்தில் பறந்து விட்டதால், மூட்டைகள் அனைத்தும் முழுமையாக நனைந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என ஹரியானா விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.