காசாவுக்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற மால்டா கப்பல் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
பாலஸ்தீனிய நகரான காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசா மக்களுக்கு உணவு மற்றும் உதவி பொருட்கள் கிடைக்கும் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்துள்ளது.
இந்நிலையில், மால்டாவில் இருந்து காசாவிற்கு உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற கப்பல் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
மால்டா கடற்பகுதியில் நடந்த இந்த தாக்குதலால் கப்பலில் இருந்தவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், கப்பல் நகரமுடியாமல் மூழ்கும் நிலையில் இருப்பதாக மால்டா அரசு தெரிவித்துள்ளது.