மெக்சிகோவில் சர்வதேச நடன தினத்தைக் கொண்டாடும் விதமாக ஆயிரக்கணக்கான நடனக் கலைஞர்களும், இசை பிரியர்களும் வீதிகளில் திரண்டு நடனமாடினர்.
அண்மையில் உயிரிழந்த மெக்சிகன் – அமெரிக்க நடனக் கலைஞரான டோங்கோலேலே மற்றும் நடிகை யோலெண்டா மாண்டெஸ் ஆகியோரை நினைவுகூறும் விதமாக, சர்வதேச நடன தினத்தன்று பிரத்தியேக நிகழ்ச்சிக்கு நகர நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
அதில் 1950-களின் ஆடைகளை அணிந்து ஏராளமான நடனக் கலைஞர்கள் கூட்டாக நடனமாடி அசத்தினர்.