பிரேசிலை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்ணாக அறியப்பட்ட கானபரோ லூகாஸ் காலமானார்.
1908-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி பிரேசிலின் ரியோ கிராண்டே டோசுலில் பிறந்த இவர், 1934-ம் ஆண்டு தனது 26-வது வயதில் துறவு பூண்டார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால், கேசெரோசில் உள்ள தனியார் மருத்துவமனையில் கானபரோ லூகாஸ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கானபரோ லூகாஸ் தனது 116-வது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்குப் பின் இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர் உலகின் மிக வயதான பெண்மணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.