ஜி.எஸ்.டி அமலான பிறகு வரி விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜி.எஸ்.டி. வரியால் நடுத்தர மக்களுக்குப் பாதிப்பு எனக் கூறுவது தவறு எனத் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி அமலான பிறகு வரி விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ஜி.எஸ்.டியில் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் மாநில அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகே எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.