சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் திமுக அரசியல் லாபம் தேடுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அரசியல் லாபம் தேடும் திமுக என்று குற்றம்சாட்டியவர், தமிழகத்தில் சாதிப் பெயரைச் சொல்லி மனித கழிவுகளைக் கலக்கும் நிலை உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஊழல் கூட்டணிகாரர்கள் எங்கள் கூட்டணி குறித்துப் பேசுவது நகைச் சுவையாக உள்ளது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
விழிஞ்ஞம் துறைமுகம் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் அதற்கான ஆதாரம் கொடுப்பதில்லை என நிர்மலா சீதாராமன் கூறினார்.