ஈரோடு இரட்டை கொலை விவகாரத்தில் தம்பதியரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்த உறவினர்கள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் விவசாயியான ராமசாமி கவுண்டர், தனது மனைவி பாக்கியத்துடன் வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக வீட்டைவிட்டு தம்பதியர் வெளியே வராததால், சந்தேகமடைந்த உறவினர், தோட்டத்து வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது இருவரும் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நகைக்காகத் தம்பதியர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பிரேதப் பரிசோதனை முடிந்தபின் தம்பதியரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.