ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.