மதுரை சித்திரை திருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்வில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அந்த வகையில் விழாவின் நான்காம் நாளில் வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியிலிருந்து மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டனர்.