சிறுவனின் கண் சிகிச்சைக்காக கூடலூரிலிருந்து துரிதமாக செயல்பட்டு
கோவைக்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கூடலூரை சேர்ந்த பிரதீப் என்பவரின் 11 வயது மகன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்த சிறுவனின் கண்களில் மரக்கட்டை குத்தியது. இதனால் அலறி துடித்த சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் கூடலூரிலிருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓட்டுநர் அழைத்து சென்றார்.
கோவைக்கு செல்ல நான்கரை மணி நேரத்திற்கும் மேலாகும் நிலையில், மூன்று மணி நேரத்தில் சென்ற ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.