திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஐந்து சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேடசந்தூர், கோகுலம் நகரை சேர்ந்தவர் கோமதி. இவர் தபால் நிலையம் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், கார்த்தி என்பவரை கைது செய்த போலீசார், செயின் மற்றும் நாட்டு துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான அபினேஷ் குமாரை தேடி வருகின்றனர்.