பாகிஸ்தான் FM-களில் இந்தியப் பாடல்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
26 பேரைப் பலிவாங்கிய பஹெல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் FM வானொலி நிலையங்களில் இந்தியப் பாடல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையைப் பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்டா தரார் பாராட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.