இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் மிகப்பெரிய அளவிலான காட்டுத்தீ பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புறநகர் பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதிகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத் தீயால் இதுவரை சுமார் 3 ஆயிரம் ஏக்கர் வனப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
காட்டுத்தீ தொடர்ந்து பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார்.