பாலஸ்தீனிய மக்களின் உணவுக்கான அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்ததால், கரை ஒதுங்கும் கடல் ஆமைகளை உண்டு உயிர் வாழும் நிலைக்குக் காசா மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காசாவில் மக்கள் வாழும் முகாம்கள், பள்ளிகள் எனக் குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதே வேளையில் காசா மக்களுக்கு எந்த உணவும், உதவிப்பொருட்களும் சென்று சேராமல் பார்த்துக்கொள்வதிலும் இஸ்ரேல் கவனம் செலுத்தி வருகிறது.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களின் உணவுக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன.