மே 7-ம் தேதி நடைபெறவுள்ள புதிய போப் ஆண்டவர் தேர்தலைக் குறிக்கும் விதமாக, வாடிகனின் சிஸ்டின் தேவாலயத்தின் கூரையில் புகைப்போக்கி நிறுவப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி உயிரிழந்தார். தொடர்ந்து அடுத்த போப் யார் என்பதைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் 80 வயதுக்குட்பட்ட உலகம் முழுவதும் உள்ள 135 கர்த்தினால்கள் வாக்களிக்க உள்ளனர். இதனையொட்டி வாடிகன் கான்கிளேவ் சிஸ்டின் தேவாலயத்தின் கூரையில் புகைப்போக்கி நிறுவப்பட்டுள்ளது.