நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டேம் நகரில் மக்கள் ஒருமித்து ஆரஞ்சு நிற ஆடைகளை அணிந்து தங்கள் மன்னரின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
நெதர்லாந்து மன்னர் வில்லெம் அலெக்சாண்டரின் 58-வது பிறந்தநாள் மே 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று முதலே நாட்டின் பல்வேறு நகரங்களிலும் விருந்துகளுடன் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
குறிப்பாகத் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமின் கால்வாய்கள் படகுகளால் நிரம்பி வழிந்த நிலையில், மக்கள் ஒருமித்து ஆரஞ்சு நிற ஆடைகளில் கூடி மன்னர் வில்லெம் அலெக்ஸாண்டரின் பிறந்த நாளை கொண்டாடினர்.