இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான கார்கள் சேதமடைந்தன.
சிம்லாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்றின் காரணமாகச் சாலையோரம் இருந்த மரங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது முறிந்து விழுந்தன.
இதனால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கார்கள் சேதமடைந்தன.
















