பெண்களுக்கான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை மாவட்டம் சித்தாபுதூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை பிரதானமாக வைத்துச் செயல்படுபவர் பிரதமர் மோடி என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு மூலமாகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் 2047-ல் இந்தியா முழுமை அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு என வானதி சீனிவாசன் கூறினார்.
எல்லாரும் தனியார் பள்ளிகளைத் தேடுவதால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டே போகிறது என்றும் நீட் தேர்வை இன்றைய மாணவர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.