சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் வியூகம் அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதில், பாஜகவின் தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து மே 5-ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.