பொள்ளாச்சி அருகே கிராவல் மண் எடுப்பதற்காக விளை நிலத்தில் வெடி வைத்துத் தகர்த்ததால் குடியிருப்புகளில் அதிர்வு ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திப்பம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கிராவல் மண் எடுப்பதற்காகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதி பெறப்பட்டு எடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அனுமதி வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், உரிமம் இல்லாத வெடி பொருட்களைப் பயன்படுத்தி மண் அள்ளுவதாகக் கூறியுள்ள விவசாயிகள், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.