திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில் இடித்து அகற்றப்பட்டது.
திருமுல்லைவாயில் 26-வது வார்டில் நேதாஜி நகர் பிரதான சாலை உள்ளது. 120 சதுர அடி சாலையை ஆக்கிரமித்துக் கடந்த 25 ஆண்டுகளாக தனம் மற்றும் நடராஜன் ஆகியோர் கோயில் கட்டியிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலை இடித்து அகற்றப்பட்டது.