பிலிப்பைன்ஸின் டார்லாக் நகரில் உள்ள சுங்கச்சாவடியில் நின்ற வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலியாகினர்.
விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தால் அங்குப் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.