சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : ஜெ.பி.நட்டா
Aug 7, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : ஜெ.பி.நட்டா

Murugesan M by Murugesan M
May 3, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது என மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள SRM கல்வி நிறுவன வளாகத்தில், 6-வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு எனக்கூறி உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தருமபுரம் ஆதீனம் மிகவும் தொன்மையானது எனத் தெரிவித்தார். கோயில்கள், புலவர்கள் என பல்வேறு சிறப்புகளைத் தமிழ்நாடு பெற்றிருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.

இதையடுத்து தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ரவி, சனாதன தர்மத்தால் தான் பாரதம் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

திருமுறை, தேவாரம் ஆகிய தலைசிறந்த படைப்புகளை சைவ சித்தாந்தம் வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், சைவ சித்தாந்தத்தைப் பிரதமர் மோடி பின்பற்றுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உயர்கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம் பாடல்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்

இதையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வந்திருந்த அனைவரையும் தமிழ் மொழியில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து சிவபெருமானை அவர் தமிழில் போற்றி வணங்கியபோது கூடியிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆன்மிகம் என்பது மதம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது எனத் தெரிவித்தார். சனாதானம் என்பது சடங்குகள் அல்ல, அது சமயத்தின் வாழ்வியல் முறை எனவும் அவர் கூறினார்.

Tags: tn bjpSaivism is not about religionit is about the soul: J.P. Naddaசைவ சித்தாந்தம்6-வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய ராணுவத்தால் அச்சம் : பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாக்கும் பாகிஸ்தான்!

Next Post

சாலை வசதி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவரை சுமார் 2 கி.மீ. தூக்கி சென்ற அவலம்!

Related News

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies