வரி விதிப்பு பேச்சுவார்த்தை குறித்த அமெரிக்காவின் அழைப்பைப் பரிசீலிக்கிறோம் எனச் சீனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீன வர்த்தக அமைச்சகம், வரி மற்றும் வர்த்தகப் போர்கள் அமெரிக்காவால் ஒருதலைபட்சமாகத் தொடங்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளது.
மேலும், வரி விதிப்பு பிரச்சனைகள் குறித்து பீஜிங்குடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான நம்பிக்கையை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளது.