உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்கைப்’ தளத்தை வரும் 5-ந்தேதியோடு நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் 21 ஆண்டுகளாகப் பயனாளர்களுக்கு இலவச வீடியோ கால் சேவைகளை வழங்கி வந்த ‘ஸ்கைப்’, தனது சேவையை இறுதியாக நிறைவு செய்ய உள்ளது.
மைக்ரோசாப்ட் டீம்ஸ்(Microsoft Teams) தளத்தில் கவனம் செலுத்தவும், மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தங்கள் சேவையை மாற்றியமைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.