கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் சுவையாகச் சமைக்கத் தெரியாத மனைவியைக் கொலை செய்த கணவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
முகளகோடா கிராமத்தை சேர்ந்த பீரப்பா – சாக்ஷிதா தம்பதியர் கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணமானது முதல் மனைவிக்கு ருசியாக சமைக்கத் தெரியவில்லை என பீரப்பா தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் உணவு பரிமாறிய மனைவி சாக்ஷிதாவிடம், உணவு ருசியாக இல்லை எனக்கூறி வசைபாடிய பீரப்பா அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் பீரப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.