லம்போர்கினி இந்தியா நிறுவனம், புதிய உயர் செயல்திறன் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் காரான லம்போர்கினி டெமராரியோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலை 6 கோடி ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது மட்டுமல்லாமல், இந்த கார் வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.
இதை 7 கிலோ வால்ட் AC சார்ஜரை பயன்படுத்தி 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். இந்த காரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கை பயன்படுத்தி பயணத்தின்போதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.