பாகிஸ்தானுக்கு எதிராகத் தற்கொலைப் படை வீரராக மாறி தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளதாகக் கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவின் எதிரிதான் என உணர்ச்சி பொங்கக் கூறினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அனுமதித்தால், தற்கொலைக் குண்டு ஒன்றை தன் உடலில் கட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்குச் சென்று தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறேன் எனவும் ஜமீர் அகமது கான் கூறியுள்ளார்.