வேலூர், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்த மறுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி 3 கார்களில் சென்றுகொண்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை கடக்க முற்பட்டனர். அப்போது அவர்களை சுங்கக்கட்டணம் செலுத்தி செல்லுமாறு அங்கிருந்த ஊழியர்கள் கேட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள் கட்டணத்தை செலுத்த மறுத்து தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் தானியங்கி தடுப்புகளை காலால் உதைத்து உடைத்த அவர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.