திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால், 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்த நவீன் குமார் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில், 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வாழை பயிரிட்டிருந்தார். இந்நிலையில், அங்கு வீசிய சூறைக்காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
இந்த சேதத்தால் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.