காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியை, காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்பு குழுவினர் ஊர்வலமாக சென்று சந்தித்து ஆசி பெற்றனர்.
காஞ்சி சங்கர மடத்தின் 71 வது இளைய மடாதிபதியாக சத்திய சந்திரசேகரேந்தர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து, பல்வேறு அமைப்பினர் காஞ்சி சங்கர மடத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, காஞ்சி காமாட்சி சங்கரமட வரவேற்பு குழுவினர் காஞ்சி குமரகோட்ட முருகர் கோவிலில் இருந்து சங்கர மடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் அளித்த பொருட்களை ஏற்றுக்கொண்டு சங்கராச்சாரியார்கள் ஆசீர்வாதம் வழங்கினர்.