கோடை சீசன் முடியும் வரை உதகை – குன்னூர் மலைப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட எஸ்.பி. நிஷா தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக காய்கறி கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொண்ட பின் பேட்டியளித்த மாவட்ட எஸ்பி., சமவெளிப் பகுதியில் இருந்து உதகை வரும் வாகனங்கள் குன்னூர் மலைப்பாதை வழியாக வர வேண்டும் எனவும், உதகையிலிருந்து செல்லும் வாகனங்கள் கோத்தகிரி மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.