கன்னியாகுமரியில் கோடை விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்தனர். இந்நிலையில் குடும்பத்துடன் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், சூரிய உதயத்தை கண்டுரசித்ததுடன் அதனை தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கடலில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர். மேலும், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை பார்வையிடவும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டினர்.